ரிஷி சுனக் அமைச்சரவையில் மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

#India #Parliament #Women #Britain
Prasu
2 years ago
ரிஷி சுனக் அமைச்சரவையில் மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது அமைச்சரவையில் மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்ணொருவரை இணைத்துக்கொண்டுள்ளார்.

38 வயதான Claire Coutinho என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமைச்சரவையில் எரிசக்தி பாதுகாப்பு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் Suella Braverman மற்றும் எரிசக்தி அமைச்சர் கிளாரி ஆகியோரின் மூதாதையர்கள் இந்தியாவின் கோவா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

பாதுகாப்பு அமைச்சர் பென் வாலல் பதவி விலகியதை அடுத்து, எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த கிராண்ட் ஷாப்ஷிடம் அந்த துறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எரிசக்தி அமைச்சு பொறுப்பு கிளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. Claire Coutinho, இங்கிலாந்தின் கிழக்கு சர்ரேய் தொகுதியில் இருந்து பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

 நேற்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இந்த அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4