பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ள எரிபொருள் விலை

#prices #people #Pakistan #Fuel
Prasu
2 years ago
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ள எரிபொருள் விலை

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பல தசாப்தங்களில் எதிர்நோக்காத மோசமான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.

ஒரு நெருக்கடியிலிருந்து இன்னுமொரு நெருக்கடிக்கு நகர்ந்து கொண்டிருக்கும் தற்போதைய தருணத்தில், அங்கு எரிபொருள் விலை 300 ரூபாவை கடந்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நிதியமைச்சு நேற்று மாலை எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை 14.91 ரூபாவிலும் அதிவேக டீசல் (HSD) விலை 18.44 ரூபாவிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை 305.36 ரூபாவாகவும் டீசல் விலை 311.84 ரூபாவாகவும் உள்ளது.

அண்மைய பொருளாதார மறுசீரமைப்புகள் காரணமாக பாகிஸ்தானில் பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உச்சத்தை எட்டியுள்ளது.

 இதனால், பாகிஸ்தான் ரூபாவின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தையும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாவின் மதிப்பு 305.6 ரூபாவாக ஆக உயர்ந்ததுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4