மாளிகாவத்தை துப்பாக்கி சூடு தொடர்பாக வெளியான தகவல்

#SriLanka #Colombo #GunShoot
Prathees
2 years ago
மாளிகாவத்தை துப்பாக்கி சூடு தொடர்பாக வெளியான தகவல்

மாளிகாவத்தை செவன மாவத்தையில் இன்று (01) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இன்று திறக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இந்த தாக்குதலில் பணியிடத்தின் உரிமையாளரான மாளிகாவத்தை பிரதீப் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அவர் திட்டமிட்ட குற்றவாளியான பஞ்சிகாவத்தை நெவில்லின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 இந்த மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தை திறக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கெசல்வத்தையில் உள்ள தினுகாவின் தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 கைத்துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!