நாளை இலங்கை வருகிறார் ராஜ்நாத் சிங்!

#India #SriLanka #Lanka4
Thamilini
2 years ago
நாளை இலங்கை வருகிறார் ராஜ்நாத் சிங்!

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுஆய்வு செய்வதற்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், நாளைய தினம் (02.09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

வரும் 03 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு விடயங்களை ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது. 

அத்துடன் இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளின் முழு வரம்பு மதிப்பாய்வு செய்யப்படும் எனவும், நுவரெலியா மற்றும் திருகோணமலைக்கு அவர் விஜயம் செய்வார் எனவும் கூறப்படுகிறது. 

இது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவை ஆழப்படுத்துவதில் ஒரு முக்கிய அடையாளமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!