கொள்கலன்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணங்களும் அதிகரிப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், கொள்கலன்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இன்று ( 09.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டணங்கள் 05 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சரக்கு கொள்கலன்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்கள் மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்கப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.