வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இலங்கைக்கு 3000மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்
#SriLanka
#Employees
#Dollar
#Lanka4
#Foriegn
#remittance
Mugunthan Mugunthan
2 years ago
2023 ஆம் ஆண்டின் முதல் அரைப்பகுதியில் 170000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஜனவரி 1ம் திகதி முதல் ஜுலை 31ம் திகதி வரையான தரவுகளின் படி 171015 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர். ஜுலை மாதத்தில் மட்டும் 24578 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.
2022இல் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியவர்களில் மொத்த எண்ணிக்கை 311056 ஆகும். இதற்கிடையில் ஜுலை மாதத்தில் உத்தியோகபுர்வமாக அனுப்பப்பட்ட பணியாளர்களின் பணம் 541மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிசமான அளவு அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதே வேளை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுலை வரையில் வெளிநாட்டுப்பணியாளர்கள் மூலம் கிடைத்த வருமானம் 3363.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.