எரிபொருள் அதிகரிப்பால் போக்குவரத்துக்கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு
#SriLanka
#Bus
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
நேற்று வியாழன் (31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் டீசல் லீற்றர் 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கும் மேல் காணப்படுவதால், பஸ் கட்டணம் அதிகரிக்கலாம். இது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கமைய பஸ்கட்டணமும் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.