பிலிப்பைன்ஸில் தொழிற்சாலை தீவிபத்து : உரிமையாளர் மற்றும் 15 பேர் உயிரிழப்பு
#world_news
#Lanka4
#Phillipines
#தீ_விபத்து
#fire
#லங்கா4
#Factory
Mugunthan Mugunthan
2 years ago

பிலிப்பின்ஸ் தொழிற்சாலையொன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 15 போ் பலியாகினா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா், மழை வெள்ளம் காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் 14 நிமிஷங்கள் தாமதமாக சென்றனா்.
மேலும், தொழிற்சாலையின் முகவரியும் அவா்களுக்கு தவறாக அளிக்கப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரா்கள் அந்த தொழிற்சாலையை அடைந்திருந்தால் பல உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவா்களில் தொழிற்சாலை உரிமையாளா் மற்றும் அவரது மகனும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.



