கொழும்பில் சட்டவிரோத சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டன
#SriLanka
#Colombo
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#Ciggerette
#சட்டம்
Mugunthan Mugunthan
2 years ago
கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 3,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றைக் கைப்பற்றியதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, கரையோர பொலிஸாருடன் இணைந்து கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் தேடுதல் நடவடி்ககை மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சிகாவத்தை சந்தியில் வீதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்டபோது வேனில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 3,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.