மருந்து கொள்வனவிற்கு அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை!
#SriLanka
#America
#Medicine
#Import
Mayoorikka
2 years ago
எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஆலோசனையை இலங்கை பெறும் என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) தலைவர் பேராசிரியர் எஸ்.டி.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் FDA யினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
NMRA இன் சுமார் ஐம்பது அதிகாரிகள் மற்றும் மருந்தாளுநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.“அதற்கு தேவையான அறிவை வழங்க நிறுவனம் உறுதியளித்துள்ளது.” எனவும் தெரிவித்தார்.
இந்த அறிவை மருந்தாளுநர்கள் பயன்படுத்தி எதிர்காலத்தில் தரம் குறைந்த மருந்துகளின் உற்பத்தியைக் குறைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.