ரஷ்யா செல்லும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன்!
#world_news
#Russia
#Ukraine
#Lanka4
Dhushanthini K
2 years ago

தானிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க துருக்கி ஜனாதிபதி எர்டோகன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்திப்பு ரஷ்யாவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்தை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போரில் முக்கிய திருப்பமாக ரஷ்யா தானிய ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. இதனையடுத்து தானிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகின் பல நாடுகள் பட்டினி நிலையை எதிர்நோக்கக்கூடும்என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



