நீரிழிவு நோயாளிகள் ஏன் கண்ணில் அதிக கவனம் எடுக்க வேண்டும்?

#Health #Eye #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #Diabetics
Mugunthan Mugunthan
8 months ago
நீரிழிவு நோயாளிகள் ஏன் கண்ணில் அதிக கவனம் எடுக்க வேண்டும்?

உயர் இரத்த சர்க்கரையானது கண்ணின் மிக நுண்ணிய திசுக்களில் உள்ள நுண்குழாய்களை அழித்து விழித்திரை பாதிப்பை ஏற்படுகிறது. இதைக் கண்டுக்கொள்ளவில்லை என்றால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படுகிறது. 

எனவே நீங்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களது கண்களைப் பராமரிக்க பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

 சர்க்கரை நோய் பாதிப்பின் போது கண்பார்வையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:

 சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் கண்பார்வைப் பிரச்சனை ஏற்படும் என்பதில்லை. அதே சமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது, கண்களின் மிக நுண்ணிய பகுதிகளுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் சேதமாகின்றது.

 இதனால் ஆரம்பத்தில் பார்வை மங்கலாகும். நாளாக நாளாக உங்களது கண்கள் நிரந்தரமாக பாதிப்படையும். எனவே அவ்வப்போது சர்க்கரை நோயின் அளவைக் குறைப்பதன் மூலம் கண்பார்வைக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

 புகைப்பிடிப்பதை நிறுத்துதல்:

 புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது பல நோய்களுக்கு வழிவகுப்பது போன்று சர்க்கரை நோய் பிரச்சனைக்கும் காரணமாக அமைகின்றது. 

குறிப்பாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் புகைப்பிடிக்கும் போது, உடலில் உள்ள நரம்புகள், தமனிகள் மற்றும் நுண்குழாய்களுக்குத் தீங்கும் விளைவிக்கும். இதோடு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பால் கண் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது அதிகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

 எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

 உடற்பயிற்சி செய்தல்:

 உடற்பயிற்சிகள், யோகா, வாக்கிங் செல்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதனால் கண்பார்வை பிரச்சனையும் ஏற்படாது. ஒருவேளைப் பணிக்கு செல்லும் நபராக இருந்து உங்களால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றால், மதிய உணவு இடைவெளியில் கொஞ்சம் பார்க்கிங் வரையாவது நடந்து செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்க முயற்சி செய்யவும்.

 ஆரோக்கியமான உணவு முறை:

 எனவே உங்களது உணவு முறையில் இலை கீரைகள், சால்மன், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், பருப்புகள், பாதாம், பீன்ஸ், காளான், மற்றும் வைட்டமின் ஏ, சி, ஈ, பீட்டா கரோட்டீன், லுடீன், ஒமோகா 3, கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கிய காய்கறிகளை உங்களது உணவு முறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

 ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்தல்:

 நீங்கள் என்னதான் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகளை நீங்கள் கடைப்பிடித்து இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தால் மட்டும் போதாது. சர்க்கரை நோய் பிரச்சனையால் உங்களது கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், ஆண்டிற்கு ஒருமுறையாவது முறையாக உங்களது கண்களைப் பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை உங்களது கண்களில் பிரச்சனை ஏற்படுவது போன்ற நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1693467225.jpg