ஆந்திராவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

#Accident #people #government #2023 #fire #Breakingnews #ImportantNews #AndhraPradesh
Mani
2 years ago
ஆந்திராவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லைக்கு அருகில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. அதிகாலை வணிக வளாகம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென ஷாப்பிங் மால் முழுவதும் பற்றி எரிந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. எரியக்கூடிய பொருட்களின் மதிப்பு 2 கோடி ரூபாய் என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4