எல்ல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் கைது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (30.08) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போ, சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் 430 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.