கர்நாடகாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

#India #Death #Accident #people #fire #Died #Karnataka
Mani
2 years ago
கர்நாடகாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சிக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சாம்பலானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4