சோனியா காந்தி காஷ்மீர் பயணத்தின் போது ஸ்ரீநகர் ஏரியில் படகு சவாரி செய்தார்

#India #Tamilnews #Breakingnews #Boat
Mani
2 years ago
சோனியா காந்தி காஷ்மீர் பயணத்தின் போது ஸ்ரீநகர் ஏரியில் படகு சவாரி செய்தார்

கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற காட்சித் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சென்றுள்ளார். காஷ்மீர் சென்ற அவர், ஸ்ரீநகரில் உள்ள நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்தார்.

ஏற்கனவே இரண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள நிலையில், இன்று சோனியா காந்தி சென்றுள்ளார். இது ஒரு குடும்ப சுற்றுப் பயணம். கட்சித் தலைவர்களை சந்திக்கமாட்டார்கள். கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கடந்த 2-ந்தேதி லடாக் சென்றிருந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தியின் முதல் பயணம் இதுவாகும். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளார்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஏரியில் சோனியா காந்தி படகு பயணம் மேற்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4