செஸ் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா முன்னேற்றம்!
#India
#WorldCup
#sports
#2023
#Sports News
Mani
2 years ago

நேற்று நிறைவடைந்த பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிச் சுற்றில், சிறந்த தரவரிசை வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் மோதிய பிரக்ஞானந்தா வெற்றிக்காக கடுமையாக போராடினார்.
இறுதியில் கார்ல்செனின் கைகள் ஓங்கியதால், பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில், செஸ் தரவரிசைப் பட்டியலில் 29வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் குகேஷ் 8வது இடத்தையும், விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.



