இன்றைய தினம் வெப்பநிலையில் மாற்றம்: அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்தல்
#SriLanka
#weather
#hot
Mayoorikka
2 years ago
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விடவும் அவதானத்துக்குரிய அளவில் வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 39 முதல் 45க்கு இடைப்பட்ட அளவில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.