அமெரிக்காவில் மில்க்ஷேக் குடித்த 3 பேர் மரணம்

#Death #Hospital #America #drink
Prasu
2 years ago
அமெரிக்காவில் மில்க்ஷேக் குடித்த 3 பேர் மரணம்

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள Tacoma நகரின் உணவகத்தில் Milkshake பானங்களைக் குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் கூறினர்.

Frugals உணவகத்தில் தயாரிக்கப்பட்ட Milkshake பானங்களில் Listeria கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவகத்தின் ஐஸ் கிரீம் இயந்திரங்கள் அசுத்தமாக இருந்ததால் சம்பவம் நேர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

மாசுபட்ட உணவை அல்லது பானத்தை உட்கொண்ட பிறகு 70 நாள்கள் வரை Listeria கிருமி ஒருவரின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும்.

 காய்ச்சல், தசை வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, குழப்பம், வலிப்பு முதலியவை Listeria தொற்றுக்கான அறிகுறிகளில் சில. மற்ற Frugals உணவங்களில் Listeria தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!