இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா

#India #Congratulations #Moon #Tamilnews #Scientists #ChiefMinister #Scientist #Rocket #ISRO
Mani
2 years ago
இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் நேற்று மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் ஆறு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது.

இஸ்ரோவின் இந்த சாதனைக்கு இந்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா துணை ஜனாதிபதி, ரஷியா அதிபர் புதின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து, சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4