இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் தமிழக மாணவர் ஜெஸ்வின் ஆல்ட்ரின்
#India
#Student
#Tamil Student
#sports
#2023
#Tamilnews
#Player
#Sports News
#Athletics
Mani
2 years ago

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஹங்கேரியில் நடைபெறும் உலகதடகள போட்டியில் நீளம்தாண்டுதலில் 8 மீட்டர் தூரம் தாண்டி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதன் மூலம் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 8.27 மீட்டர் நீளம் தாண்டினால் அடுத்த வருடம் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஆல்ட்ரின் தகுதி பெறுவார்.



