பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் நாளை கிளிநொச்சியில்!
#SriLanka
#Sri Lanka President
#Kilinochchi
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும், கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் நாளையதினம்(23) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
உள்ளூர் உற்பத்தியை, உற்பத்தியாளர்களின் சுயதொழிலினை மேம்படுத்துவதனூடாக, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்ததுவதனை நோக்காகக் கொண்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்போது எமது பாரம்பரிய நஞ்சற்ற உணவு வகைகளை காட்சிப்படுத்தும் முகமாக சுமார் 28 விற்பனைக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
எனவே குறித்த பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனை நடைபெறும் வளாகத்திற்கு வருகைதந்து பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
