இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் கலாநிதி கோத்தபாய ரணசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், "கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இதய நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 166-170 பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்.
நாம் நோயாளிகளை அன்றாடம் பரிசோதிக்கும் போது மேல் மாகாணத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இதய நோயாளிகளின் அதிகரிப்புக்கு உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.