சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க முடிவு

#SriLanka #Tourist #Lanka4
Kanimoli
2 years ago
சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க முடிவு

சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு, குடியேறிகள் மேம்பாட்டு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு அமைச்சின் கீழ் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பிரிவில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!