பாராளுமன்றம் நாளை முதல் கூட்ட முடிவு
#SriLanka
#Parliament
#Lanka4
Kanimoli
2 years ago
பாராளுமன்றத்தை நாளை (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
ஓகஸ்ட் 24ஆம் திகதி வியாழக்கிழமை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.