நுகர்வோர் அதிகாரசபையை சேர்ந்தவர்கள் என கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
நுகர்வோர் அதிகாரசபையை சேர்ந்தவர்கள் என கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள்!

தற்போது, ​​நுகர்வோர் அதிகாரசபையை சேர்ந்தவர்கள் என கூறி வியாபாரிகளுக்கு மிரட்டல் விடுத்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.  

குறித்த நபர்கள்  போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பொருட்களில் பிரச்சனைகள் இருப்பதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறி நிதி மோசடியில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன் காரணமாக, வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அத்தகைய அழைப்பு வந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மேற்படி அதிகாரிக்கோ தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.  

இவ்வாறான அழைப்புகள் தொடர்பான தகவல்களை நுகர்வோர் அதிகாரசபையின் 1977, 0112 445 897, 0771 088 922 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என மேற்படி அதிகார சபையின் தலைவர்  சாந்த நிரியெல்ல கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!