குற்றவாளியான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி

#SriLanka #Arrest #Police #Lanka4
Kanimoli
2 years ago
குற்றவாளியான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடம் வாக்குமூலம் பெற CID விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான மாகந்துரே மதுஷின் சீடர்களான “ஹரக் கட்டா” என்ற நந்துன் சிந்தக மற்றும் “குடு சலிந்து” ஆகியோர் அண்மையில் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டனர்.

 கைது செய்யப்பட்ட கரக் கட்டா உள்ளிட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்காவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்பட்டு தடுப்புக்காவலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!