ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இன்று ஆரம்பமாகுகிறது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது பெரஹெரா இன்று (21.08) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பெரஹரா எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பின்னர் 26ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் திகதி மகாவலி கட்டம்பே படகில் நடைபெறும் நீர் வெட்டு விழாவின் பின்னர் இந்த விழா நிறைவடையும்
ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவுற்றது குறித்து தியவடன நிலமேய ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினூடாக அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.