அத்துகல காட்டிற்கு தீ வைத்த இராணுவவீரரும் காதலியும் கைது
கடந்த 18ம் திகதி அத்துகல காட்டிற்கு வேண்டுமென்றே தீ வைத்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ வீரரும் அவரது காதலியும் வன கட்டளைச் சட்டத்தின் கீழ், குருநாகல் மேலதிக நீதவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை இன்று (21) நடைபெறவுள்ளது.
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் மாத்தளை மஹாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ம் திகதி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புத்தரை வழிபட்டு படியில் இறங்கி வரும் போது காதலனின் சட்டைப்பையில் இருந்து தீப்பெட்டியை எடுத்து காதலி தீக்குச்சியை கொளுத்தி வறண்ட காட்டுக்குள் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக பரவிய தீ பரவாமல் தடுக்க காதலர்கள் முயன்றும் தோல்வியடைந்தனர். அத்துகலயில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் ஊழியர்களின் ஆதரவுடன் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடிந்தது.
குறித்த வனப்பகுதியில் சுமார் 3 பேர்ச்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், வேறு ஏதேனும் உள்ளக அழிவுகள் இடம்பெற்றுள்ளதா என ஆராய தொல்பொருள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குருநாகல் தலைமையக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.எச்.எம்.பி.சி. திரு.கொப்பேவலவின் ஆலோசனையின் பேரில்இ தம்பதியினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.