மட்டக்களப்பில் நடைபெற்ற கல்விக் கோட்ட தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழா
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்ட தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ லங்கா மீடியா போரம் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிப்பு.
"சாதனையாளர்களை " பாராட்டி மகிழ்வோம் " அவர்களின் அடுத்த வெற்றிக்கு வழியமைப்போம்"! எனும் விசேட செயற்றிட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தினால் தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டப்பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜே.எப்.றிப்கா, ஜே.தாஜுன் நிஸா, ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஓட்டமாவடி கோட்ட தமிழ் தின விழாக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க போட்டியில் முதல் இடங்களை பெற்றுக் கொண்ட 80 மாணவர்களுக்கு ஸ்ரீ லங்கா மீடியா போரத்தினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது.


