புலிகளாலும் இலங்கை இஸ்லாமிய ஆயுத குழுக்களாலும் ஏற்பட்ட இன மோதலுக்கும் இலங்கை மும்மத மக்களுக்கும் தொடர்பு இல்லை
போராட்ட காலங்களில் புலிகளால் இஸ்லாமிய குழுக்கள் சுடப்பட்டதும். இஸ்லாமிய குழுக்கள் இராணுவத்துடன் இணைந்து தமிழர்களை வெட்டிக் கொன்றதும். புலிகளின் 2009 ஆம் ஆண்டுடன் முடிந்தவிடையம்.
அதை வைத்து இரு தரப்பும் இன, மத துவேசம் காட்டுவது வெறும் அரசியலே. அதற்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை.இப்பொழுது தேவை மூவின மக்களின் ஒற்றுமையே.
இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் தமிழர்களோ இஸ்லாமியர்களோ அடிபடாமல் அரசியல்வாதிகளின் வலைக்குள்ளும் அவர்களின் முகவர்களின் சிறைக்குள் விலாமல் ஒன்றாய் ஒற்றுமையால் செயற்படவேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு மக்களை விட தமது பதவி, புகழ், பட்டம், பணம் போன்றவையே முக்கியமாகும் மக்கள் அல்ல. இதை மூவின மக்களும் புரியும் வரை மக்களுக்கு விடிவு இல்லை.
புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் துரத்தப்பட்டது புலிகளின் அவ்வேளை அமைப்பு செய்த நடவடிக்கை,அதற்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை. யாழ் மக்களுக்கோ தமுழ் சிங்கள மக்களுக்கோ சகோதர நல்ல இஸ்லாமிய மார்க்கத்தினர்மீது துவேசம் வெறுப்பு இருக்குமாயின் இஸ்லாமியரின் பெரிய வியாபாரங்கள் நடாத்த முடியாது.
இலங்கையில் இஸ்லாமியரின் வாடிக்கையாளர்கள் இஸ்லாமியரை விட தமிழ் சிங்களவர்களே. எனவே மூவின மக்களே துவேச தன்னல அரசியல்வதிகள் தங்கள் தன்னலத்துக்காக அணைந்த நெருப்பை ஊதி ஊதி பற்ற வைப்பார்கள்
அதற்குள் உங்கள் வாழ்வையும் உங்கள் வருங்கால சந்ததிகளின் வாழ்வையும் எரித்துவிடாதீர்கள். இலங்கையின் அழிவுக்கு அரசியல்வாதிகளும் துவேச ஆன்மீகவாதிகளும் மட்டுமே காரணம்.
அதர்க்குள் நீங்கள் வீழ்ந்து கருகிவிடாமல் ஆண்டவன் உங்களை காப்பானாக.
இது ஒர் lanka4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தியாகும்.
நட்புடன் செல்வா-சுவிஸ்