சமாதான பேச்சுவார்த்தைக்காக இளவரசர் ஹாரியை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ்

#Meeting #KingCharles #England
Prasu
2 years ago
சமாதான பேச்சுவார்த்தைக்காக இளவரசர் ஹாரியை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் இளவரசர் ஹாரி ஆகியோர் சுமூக பேச்சுவார்த்தைக்காக அடுத்த மாதம் முக்கிய சந்திப்பை நடத்தவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து ஹாரி - மேகன் மேர்க்கல் தம்பதி விலகி கலிபோர்னியாவில் குடிபெயர்ந்தனர். இதன்பின்னர் தந்தை சார்லஸ் உடனான உறவில் ஹாரிக்கு விரிசல் ஏற்பட்டது, 

அவரின் நினைவுக்குறிப்பு புத்தகமான ’ஸ்பேரில்’ கூறப்பட்ட பல விடயங்கள் விரிசலை அதிகப்படுத்தின.

இந்த சூழலில், மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் ஹாரி ஆகியோர் சுமூக பேச்சுவார்த்தைக்காக அடுத்த மாதம் முக்கிய சந்திப்பை நடத்தவுள்ளனர் என ‘ஓகே’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த சந்திப்பில் ஹாரியின் மனைவி மேகன் மேர்க்கல் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று லண்டனில் தந்தையும், மகனும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 செப்டம்பர் 20 ஆம் திகதி மன்னர் பிரான்சுக்கு விஜயம் செய்வார் என கூறப்படும் நிலையில் அதற்கு முன்னர் இளவரசர் ஹாரியைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!