இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் ஷா மெஹ்மூத் குரேஷி கைது
#Arrest
#Pakistan
#Minister
#ImranKhan
Prasu
2 years ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஷா மக்மூத் குரேஷி அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமரும், கட்சித் தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்ட இரு வாரங்கள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரேஷி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



