தாழையடியில் கடல் நீரை நன்னீராக சுத்திகரித்து, யாழிற்கு கொண்டு வர முடிவு
#SriLanka
#Jaffna
#water
#Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக, தாழையடி பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரித்து, யாழிற்கு கொண்டுவரும் பாரிய வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த திட்டத்தை இவ்வருடத்தில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய தற்போது இந்த திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்த புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் 12 இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.




