கிளிநொச்சியில் விளையாட்டு வீரர்களுக்கான விசேட பயிற்சி முகாம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தேசிய மட்ட போட்டிகளில் பங்குபெற்றும் வீரர்களுக்கான விசேட பயிற்சி முகாம் இன்று (20.08) நடைபெற்றது.
கிளி சரவணா நிதியத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு நடத்தும் இந்த பயிற்சி முகாமில், வளவாளர்களாக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை விரிவுரையாளரும் நியூசிலாந்தின் முதன்மை பல்கலைக்கழகத்தில் விளையாட்டிற்கான முதுமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்தவரும், நியூசிலாந்தின் முதன்மை விளையாட்டு கழகம் ஒன்றின் பிரதான பயிற்றுவிப்பாளருமான ஜெகநேந்திரன், மலேசிய பல்கலைக்கழகம் ஒன்றின் விளையாட்டிற்கான இளமானி கற்கை நெறியினை பூர்த்தி செய்தவரான தனுராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்கள், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள, பாடசாலை விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


