யாழில் 130Kg கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
#SriLanka
#Jaffna
#Arrest
#drugs
Prasu
2 years ago
யாழ் - வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 61 பொதிகளில் 130Kg கஞ்சா அடைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும், சந்தேகநபரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.