லைகா குழுமத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் இலங்கை வந்தடைந்தார்
லைக்கா குழுமத்தின் உரிமையாளரான அல்லிராஜா சுபாஸ்கரன் நேற்று இலங்கை வந்தடைந்தார்.
லைக்கா மொபைல் குழுமத்திற்கு குறுகிய கால ஒப்பந்தத்தின் பேரில் சேனல் ஐ குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது வருகை அமைந்துள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட டுலஉய குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுபாஸ்கரன், தெற்காசிய பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் குழுமத்தின் வணிகங்களை விரிவுபடுத்தி வருகிறார்.
2021 இல், அவர் லங்கா பிரீமியர் லீக்கின் யாழ்ப்பாண உரிமையை வாங்கியதுடன்இ அதன் பின்னர் லீக்கில் செல்வாக்குமிக்க பங்குதாரராக இருந்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்து, குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் லைக்கா மொபைல் குழுமத்திற்கு சேனல் ஐ குத்தகைக்கு விடப்பட்டதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன முன்னதாக தெரிவித்தார்.
நிதி நெருக்கடியில் உள்ள சேனல் ஐ நிறுவனத்தை குத்தகைக்கு விடுவது என்ற முடிவு, பணிப்பாளர் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சரவை மாநாட்டின் போது அவர் கூறினார்.