ரஷ்யாவில் இருந்து உக்ரைனில் உள்ள தியேட்டர் மீது சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதல்
#War
#Russia Ukraine
Prathees
2 years ago

உக்ரைனின் செர்னிவ்சியில் உள்ள தியேட்டர் மீது சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 144 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 15 பேர் சிறுவர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் Chernivtsi பகுதியில் உள்ள பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றும் அழிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் அவதானம் செலுத்தி வருவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ராணுவம் விரைவில் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்தார்.



