நாட்டின் ஜனாநாயகத்தை பாதுகாக்க நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டும்!
ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாதது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், வலியுறுத்தியுள்ளார்.
கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரச நிறுவனங்களை அரசியல்மயப்படுத்துவதே பிரதான காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கடனை மறுசீரமைப்பது குறித்தும், அந்தக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் EPF-க்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலுக்கு தேவையான பணத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அந்த உதரவுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. இப்போது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.