இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும், சீனாவுடன் நம்பகமான உறவுகள் கட்டியெழுப்பப்படும்!
#SriLanka
#லங்கா4
Thamilini
2 years ago
இலங்கையில் எந்த அரசாங்கம் நியமிக்கப்பட்டாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நம்பகமான நட்புறவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன பல்வேறு தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். குறித்த நேர்காணலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், உலகப் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மகத்தான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.