பிரித்தானியாவில் 7 குழந்தைகளை கொலை செய்த செவிலியர் குற்றவாளி என அறிவிப்பு

பிரித்தானியாவில் 7 குழந்தைகளை கொலை செய்த இரக்கமற்ற செவிலியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. வட பிரித்தானியாவில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் தான் இந்த கொடூர சம்பவங்கள் 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது.
குறித்த மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.
இந்த நிலையில் குழந்தைகளின் பிரிவில் செவிலியராக 33 வயதான Lucy Letby என்ற பெண் பணியாற்றிய போது, 7 குழந்தைகளை கொலை செய்ததோடு, 6 குழந்தைகளை கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் கடந்த 2018ல் கைது செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் நடந்த சோதனையில் சில கடிதங்கள் கிடைத்தன. அதில், “நான் கெட்டவள், இந்த கொலையை நான் தான் செய்தேன், நான் வாழத் தகுதியற்றவள். அவர்களைப் பராமரிக்கும் தகுதி எனக்கு இல்லை என்பதால் வேண்டுமென்றே அவர்களைக் கொன்றேன்” என எழுதப்பட்டிருந்தது.
கைதான Lucy மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் குற்றவாளி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 21ஆம் திகதி மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.
இறுதியில், ஏப்ரல் 2017 இல் NHS அறக்கட்டளை மருத்துவர்கள் காவல்துறையை சந்திக்க அனுமதித்தது. அவர்களிடம் குழந்தைகள் இறப்பு தொடர்பான சந்தேகங்களை ரவி உள்ளிட்ட மருத்துவர்கள் எழுப்ப தொடங்கியதையடுத்தே Lucy பிடிப்பட்டார்.



