கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி புகையிரத பாதையில் பயணித்த பெண் ரயிலில் அடிபட்டு பலி

#SriLanka #Accident #Train
Prathees
2 years ago
கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி புகையிரத பாதையில்  பயணித்த பெண் ரயிலில் அடிபட்டு பலி

கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி புகையிரத பாதையில் பயணித்த பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இன்று உயிரிழந்துள்ளார்.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொட்டகலை புகையிரத நிலைய அதிகாரி ஒருவர், இன்று மாலை கொட்டகலைக்கும் ஹற்றனுக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 1008 இலக்க புகையிரதம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 அந்த வகையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் அந்த புகையிரதத்தில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் சடலத்தை கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த பத்தனை திம்புல பொலிஸ் அதிகாரி ஒருவர், கையடக்கத் தொலைபேசியை பாவித்து புகையிரத பாதையில் பயணித்த பெண்ணொருவர் புகையிரதத்தில் உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவர் ஹற்றன் குடாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன்படி பெண்ணின் உறவினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!