போலந்தை தாக்க திட்டமிடும் வாக்னர் படையினர்!
#world_news
#Russia
#Lanka4
Dhushanthini K
2 years ago

போலந்து மீது தாக்குதல் நடத்த வாக்னர் படை இரகசிய திட்டமிட்டிருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் மோராவைக்கி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக வாக்னர் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் நாட்டு எல்லையை நெருங்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் உத்தரவுக்கு அமைய இந்த இரகசிய தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதனை முறியடிக்கும் வகையில் தமது நாட்டு இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



