ஹம்பாந்தோட்டை யில் காத்தாடிகளை பறக்கவிடுபவர்களுக்கு எச்சரிக்கை
#SriLanka
#Hambantota
Prathees
2 years ago
ஹம்பாந்தோட்டை - பொல்பிட்டிய உயர் அழுத்த பாதைக்கு அண்மித்த பகுதிகளில் காத்தாடிகளை பறக்கவிட வேண்டாம் என இலங்கை மின்சார சபை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை - பொல்பிட்டிய 220 கிலோவோல்ட் உயர் மின்னழுத்த மின் கடத்தல் பாதையின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால்இ அவ்வாறு செய்ய வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.