லடாக்கில் பைக் ரைட்! ராகுல் காந்தியின் வைரலான புகைப்படங்கள்

#India #Breakingnews #Rahul_Gandhi #Bike
Mani
2 years ago
லடாக்கில் பைக் ரைட்! ராகுல் காந்தியின் வைரலான புகைப்படங்கள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது லே மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ளபேங்காங் சோ ஏரிக்கு ராகுல் காந்தி பைக் ரைடு சென்றார். அதை ராகுல் காந்தி, புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன், " என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அற்புதமான இடங்களில் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி (நாளை) பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

நேற்று லடாக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதன்பிறகு, மாவட்டத்திற்குள் கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4