உக்ரைனுக்கு Leopard 1 வகை டாங்கிகளை வழங்கும் ஜேர்மனி!
#War
#Lanka4
#Russia Ukraine
Dhushanthini K
2 years ago

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட "Leopard 1" தாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் குறித்து உக்ரைன் வீரர்களுக்கு ஜேர்மனி பயிற்சியளித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு 100 "Leopard 1" வகை டாங்கிகளை வழங்க ஜெர்மன் அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக உக்ரைன் பெருமளவிலான ஆயுதங்களை இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.
ஆகவே போர் இன்னும் நீடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் கருங்கடல் தானிய ஒப்பந்த முறிவு மேற்குலக நாடுகளை மட்டுமன்றி பிற நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



