நல்லூர் செம்மணி வளைவு பகுதியில் விபத்து - ஒருவர் பலி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் - நல்லூர் செம்மணி வளைவு பகுதியில் உந்துருளி ஒன்று, நீர் தாங்கி ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (19.08) இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் உந்துருளியில் பயணித்ததாகவும், அதில் கணவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 31 வயதான புவனேஷ்வரன் மனோஜ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.