ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் கைது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீமின் சகோதரர் கண்டி காவல்துறையின் மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தினால் வழங்கப்பட்ட விசாக்களை போலியாக தயாரித்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து கண்டி பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகவும், அவர் மீது மேலும் மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.