இலங்கையில் எழுத்தறிவு குறைவாக உள்ள மாணவர்கள்: ஐ.நா சிறுவர் நிதியம்
#SriLanka
#UN
Mayoorikka
2 years ago
நாட்டில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 85 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு குறைவாக உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைமையானது குழந்தைகளின் இடைநிலைக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டதனால், அல்லது இடைநிறுத்தப்பட்டமையினால் ஆரம்பப் பிரிவை சேர்ந்த 1.6 மில்லியன் மாணவர்கள் கல்வியை இழந்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.