அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் - ரஷ்யா எச்சரிக்கை!

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ரஷ்யாவின் ஒரே பதில் அணு ஆயுதங்கள் மட்டுமே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய போர் நிலைவரங்கள் குறித்து அந்நாட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நமது நாட்டின் பாதுகாப்பிற்கு சில குறிப்பிடத்தக்க வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு இன்று அணு ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமே சாத்தியமான பதில் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை ரஷ்யா - உக்ரைன் போர் 500 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஆயுத வளங்கள் தீர்ந்துவிட்டதாகவும், அந்நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றியிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற எச்சரிக்கைகள் அடிக்கடி விடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



